Maintain Social Distancing.
Stay Home & Stay Safe.

Let's beat the Corona Virus Together

ஊரடங்கு விதிமுறைகள்

  • தமிழக அரசின் உத்தரவின் படி முழு ஊரடங்கு 09.08.2021 முதல் 23.08.2021 காலை 6.00 மணி வரை சில தளர்வுகளுடன் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் முழுமையாக அனுமதிக்கப்படுகிறது. சில சேவைகள் அனுமதிக்கப்படவில்லை. அதன் விபரம் பின்வருமாறு. I-முற்றிலும் அனுமதிக்கப்படாத சேவைகள்
  • மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
  • சினிமா தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் (Multiplex) செயல்பட அனுமதிக்கப்படாது.
  • அனைத்து பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
  • நீச்சல் குளங்கள் அனுமதிக்கப்படாது.
  • சமுதாயம்,அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
  • பொழுது போக்குகள்,விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை. II.நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும் சேவைகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் படி திருமண நிகழ்வுகளில் 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
  • இறப்பு நிகழ்சியில் 20 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். III.புதிதாக அனுமதிக்கப்படும் சேவைகள்
  • தொழில் பயிற்சி (ITI & Industrial Schools Type writing/Short hand Technical)நிறுவனங்கள் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படும்.
  • ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட நிர்வாக பணிகள் தொடர்பாக பள்ளியில் பணியாற்ற அனுமதிக்கப்படும்.